படிப்படியாக கற்றுக்கொள்ளுங்கள் — உதாரணங்களுடன், தமிழில்.
ஒவ்வொரு trade முன்பும் இந்த checklist பின்பற்றுங்கள்.
நீங்கள் ஒவ்வொரு நாளும் Nifty-யின் Breaking Points (High BP / Low BP) கண்டுபிடிக்கிறீர்கள். ஆனால் "இப்போது CE வாங்கலாமா? PE வாங்கலாமா? காத்திருக்கணுமா?" என்ற கேள்வி எழுகிறது — அல்லவா?
இந்த கருவி 5 indicators-ஐ ஒரே இடத்தில் check செய்து, உங்கள் S&R levels-ஐ வைத்து தானாகவே verdict கொடுக்கும். Emotion இல்லை, logic மட்டுமே.
கருவியை திறப்பதற்கு முன்பே இந்த 4 விஷயங்கள் உங்களிடம் இருக்க வேண்டும்:
| என்ன வேண்டும் | எங்கே பார்க்கவும் | உதாரணம் |
|---|---|---|
| Previous Day High & Low | TradingView / Zerodha Chart → Previous Day சென்று பார்க்கவும் | High: 24,600 Low: 24,350 |
| Opening Spot Price | NSE website / Kite app → 9:15 AM open price | 24,480 |
| India VIX | NSE.com → Market Data → VIX Index | 13.5 (ideal) |
| Options Chain | NSE → Equity Derivatives → Options Chain → NIFTY | ATM strike OI பார்க்கவும் |
Morning Routine
9:15–9:30 AM market open ஆகும்போது trade செய்யாதீர்கள். 9:30 வரை காத்திருந்து முதல் 15 நிமிடத்தின் High & Low பார்த்த பிறகு இந்த கருவியை திறவுங்கள்.
Page-யின் மேல் பகுதியில் 6 fields உள்ளன. இவற்றை fill செய்வது mandatory:
தற்போது Nifty எங்கே trade ஆகுது என்பதை enter செய்யவும். இது OI chart-ல் ATM strike கண்டுபிடிக்க உதவும். Real-time price: Zerodha Kite-ல் NIFTY 50 பார்க்கவும்.
Previous day-யின் High அல்லது முக்கியமான Resistance level. உதாரணம்: Yesterday high = 24,600 → இதை High BP-ல் enter செய்யவும். Price இதை தாண்டினால் CE வாய்ப்பு.
Previous day-யின் Low அல்லது முக்கியமான Support level. Price இதை உடைத்தால் PE வாய்ப்பு. இந்த இரண்டு புள்ளிகளுக்கு இடையில் trade-ஐ plan செய்யுங்கள்.
NSE website-ல் India VIX பார்த்து enter செய்யவும். VIX enter ஆனவுடனே card automatically green / amber / red ஆகும். 20+ ஆனால் கருவி automatically "தவிர்க்கவும்" verdict கொடுக்கும்.
CE வாங்கணுமா, PE வாங்கணுமா என்று நீங்கள் consider செய்வதை select செய்யவும். இது verdict-ஐ customise செய்யும் — VWAP, RSI signals direction-க்கு ஏற்ப evaluate ஆகும்.
உங்கள் Breaking Point-ல் price touch ஆனவுடன், 5 நிமிட chart-ல் candle pattern பாருங்கள். Candle close ஆன பிறகு மட்டுமே signal confirm.
| நீங்கள் பார்ப்பது | என்ன select செய்வது | என்ன செய்வது |
|---|---|---|
| Support-ல் Hammer / Bullish Engulfing candle | ✓ உள்ளது | CE trade consider |
| Resistance-ல் Shooting Star / Bearish Engulfing | ✓ உள்ளது | PE trade consider |
| Doji மட்டும் தெரிகிறது | ~ தெளிவில்லை | அடுத்த candle வரை wait |
| Bearish candle support-ல் close ஆகுது | ✗ இல்லை | CE entry வேண்டாம் |
Chart-ல் RSI indicator add செய்யவும் (TradingView: RSI மட்டும் search செய்யவும், period=14). கீழே உள்ள range-ஐ பார்த்து slider set செய்யுங்கள்.
RSI Divergence — சக்திவாய்ந்த Signal
Price புதிய low செய்கிறது, ஆனால் RSI higher low செய்கிறது → Bullish divergence → CE buy strong signal. Price புதிய high, RSI lower high → Bearish divergence → PE buy.
TradingView-ல் "VWAP" indicator add செய்யவும். ஒரு orange/purple line தெரியும் — அது VWAP. நிற்கும் price அதை விட மேலேயா கீழேயா என்று பாருங்கள்.
| நிலை | CE trade | PE trade | Select |
|---|---|---|---|
| Price VWAP மேலே உள்ளது | சாதகம் | எதிர் | "↑ மேலே" select |
| Price VWAP கீழே உள்ளது | எதிர் | சாதகம் | "↓ கீழே" select |
| Price VWAP-க்கு மிகவும் அருகில் | Direction தெளிவில்லை | "~ அருகில்" select | |
Chart-ல் volume bars பாருங்கள் (default-ஆக கீழே இருக்கும்). Breaking Point touch ஆகும் candle-ல் உள்ள volume bar, முந்தைய 5–10 candle volume-ஐ விட உயரமாக இருக்கிறதா?
NSE website → Derivatives → Options Chain → NIFTY select செய்யவும். ATM strike-ல் CE OI மற்றும் PE OI compare செய்யுங்கள்.
| OI நிலை | என்ன அர்த்தம் | Signal |
|---|---|---|
| PE OI குறைகிறது (Unwinding) | PE sellers exit ஆகுது → Price ஏறலாம் | CE சாதகம் |
| CE OI குறைகிறது (Unwinding) | CE sellers exit → Price இறங்கலாம் | PE சாதகம் |
| ATM-ல் 80L+ CE OI build-up | Sellers resist — resistance strong | CE சிரமம் |
| Both OI stable | Movement uncertainty | நடுவில் |
அனைத்து indicators-ஐயும் select செய்த பிறகு, page-ல் "இறுதி முடிவு" section-ல் verdict தெரியும். மூன்று நிலைகள் உண்டு:
Direction தெளிவாக உள்ளது. Full lot-ல் trade செய்யலாம். Entry plan-ல் உள்ள SL பின்பற்றவும்.
Risky but possible. 1 lot மட்டும் போடுங்கள். Tight SL. மற்ற signals confirm ஆகும் வரை wait.
Trade skip செய்யுங்கள். "No trade is also a trade." அடுத்த setup வரும்வரை wait.
VIX 20+ Auto Override
India VIX 20-ஐ தாண்டினால், score எவ்வளவு இருந்தாலும் verdict automatically "Trade தவிர்க்கவும்" ஆகும். அந்நாள் options buying செய்யாதீர்கள் — IV crush காரணமாக direction சரியாக இருந்தாலும் loss வரலாம்.
| Indicator | நிலை | Signal |
|---|---|---|
| Candlestick | 9:16 AM-ல் Low BP-ல் Bullish candle, 5min close above support | ✓ உள்ளது |
| RSI (14) | ~38 (oversold zone, turning up) | ✓ சாதகம் |
| VWAP | Price VWAP-க்கு மேலே reclaim செய்தது | ✓ மேலே |
| Volume | 9:16 candle high volume உடன் close | ✓ அதிகம் |
| OI | PE OI unwinding — PE sellers exit | ✓ CE சாதகம் |
| Indicator | நிலை | Signal |
|---|---|---|
| India VIX | 22+ — SEBI announcement day spike | ✗ 20+ AVOID |
| Candlestick | Gap down open, bearish candles | ✗ இல்லை |
| RSI | ~65 — already elevated | ✗ எதிர் |
| VWAP | Price VWAP கீழே — bearish | ✗ கீழே (CE-க்கு) |
| OI | Both CE & PE OI confusing — event day | ~ நடுவில் |
பாடம்
April 1 trade-ல் ₹5,200 loss ஆனது. இந்த கருவியில் VIX enter செய்திருந்தால், அன்றே "trade வேண்டாம்" என்று verdict வந்திருக்கும். ஒரு tool-ஐ consistently பயன்படுத்துவதே discipline.
இந்த checklist-ஐ print செய்து தினமும் trade-க்கு முன் பயன்படுத்துங்கள். Digital tool-ஐ திறக்க முடியாத நேரத்தில் இது உதவும்.
Tools உதவும், ஆனால் discipline மட்டுமே consistent profit தரும். ஒவ்வொரு trade-உம் ஒரு கற்றல் வாய்ப்பு. Loss வந்தால் கலங்காதீர்கள் — journal-ல் எழுதுங்கள், lesson கற்றுக்கொள்ளுங்கள். Small profit = Big confidence.